Header Ads



யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளுக்கு உலகவங்கி பிரதிநிதிகள் விஜயம்


யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நிஹால் பெனாண்டோ உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 

இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கும் அவர்கள் சென்றுள்ளார். ´ஏன்ரிப்´ திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்க்கொள்ளப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாடசாலை கட்டடங்கள் உட்பட பல திட்டங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். 

யாழ்ப்பாணம் செயலக ´என்ரிப்´ திட்ட அலுவலர்கள் உட்பட ஏனைய அலுவலர்களும் கூடச்சென்று உரிய திட்டங்கள் காட்டப்பட்டன. வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது நடைபெறும் அபிவிருத்தி செயல் திட்டங்களை காட்டினார்கள். 

இதேவேளை நேற்று புதன்கிழமை மன்னார் பகுதிக்குச் சென்றுள்ள உலகவங்கிப் பிரதிநிதிகள் அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.