Header Ads



பிரிட்டனில் 450 கல்வி நிலையங்களுக்கு தடை


ஐக்கிய இராச்சியத்திற்கான மாணவர் விசா நடைமுறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்தும் ஒரு நடவடிக்கையாக புதிய மாணவர்களை அனுப்புவதற்கு 450 கல்வி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஓவ்வொரு வருடமும் 11ஆயிரம் மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக விசா வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கும் கல்வி நிறுவனங்கள் ஒழுங்கீனமாக நடத்துகொள்வதாகவும், நேரசூசி, மாணவர் பதிவேறு என்பன அவர்களிடம் இல்லை என்றும் பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் டேமியன் தெரிவித்துள்ளார்.

இந்த கல்வி நிறுவனங்கள் கல்வி வழங்குவதை விட குடிபெயர்தலுக்கான சேவைகளையே வழங்குகின்றன என அவர் தெரிவித்தார். படிக்கும் காலத்தில் வேலை செய்வதற்கும் உறவினர்களை அழைப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.