இம்முறை ஹஜ் கடமையில் 30 இலட்சம் முஸ்லிம்கள்
பெருந்தொகையான ஹாஜிகள் மினாவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை வெள்ளிக்கிழமை வந்தடைந்துள்ளனர். இவர்களது தொகை ஏறத்தாழ மூன்று மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகனங்கள் மூலமும் கால்நடை மூலமும் மக்காவிலிருந்து மினாவை வந்தடைந்தனர்.
சனிக்கிழமை ஹஜ்ஜின் பிரதான நாளான அறபா தினமாகும். மக்காவின் பல பிரதேசங்களிலும் ஏனைய இடங்களிலும் ஹாஜிகளின் பாதுகாப்பு, இயல்பான வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் கவனிப்பதற்கென அண்ணளவாக 50,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஷைத்தானுக்குக் கல்லெறியும் ஜம்றாத் பாலங்களுக்கு அருகில் பெருந்தொகையான சிவில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கல்லெறியும்போது ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கான முன்னேற்பாடே இதுவாகும்.

Post a Comment