Header Ads



17 ஆவது சார்க் மாநாடு - மஹிந்த மாலைதீவு சென்றார்


மாலைத்தீவில் எதிர்வரும் 10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ள 17வது சார்க் நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று புதன்கிழமை காலை மாலைத்தீவு நோக்கிச் சென்றுள்ளார்.

மாலைத்தீவின் அத்து நகரில் முதல் முதலாக சார்க் மாநாடு நடைபெறுகிறது.
வலய மட்டத்திலான கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழிநுட்பம், சுற்றாடல் அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றம், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து சார்க் மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.