பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க ஆண்களுக்கு தெளிவூட்டும் திட்டம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பாக ஆண்களை தெளிவூட்டுவதற்கான விசேட திட்டமொன்றினை சிறுவர் அபி்விருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள ஆண்களை இலக்காககொண்டு நாடளாவிய ரீதியில் தெளிவூட்டல் நிகழ்சிகளை செயற்படுத்தியுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவிக்கிறார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆண்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு ஆண்களாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற தொனிப்பெருளில் இந்த செயற்திட்டத்தை அமைச்சு முன்னெடுத்துள்ளது. குறிப்பாக பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த மேலும் தெரிவித்தார்.
Post a Comment