Header Ads



ஆபிரிக்கர் கத்தியால் குத்தியதில் இலங்கை தமிழர் லண்டனில் பலி

லண்டனில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு குரொய்டன் பகுதியில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றிக்கு அவர் சென்றிருந்த வேளை இச்சம்பவம் நடந்துள்ளது. விழா நடந்த மண்டபத்துக்கு வெளியே நின்ற சில ஆபிரிக்க நாட்டவர்கள் கற்களை வீசியதால் வெளியே என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்ற குறித்த நபரை ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

அதிக ரத்தப்பெருக்கால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர் கந்தசாமி அகிலகுமார் என்று அறியப்படுகிறது. யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலகுமார் 9மாதக் குழந்தையின் தந்தையாவார். 29 வயதாகும் அகிலகுமாரை ஏன் அவர்கள் கத்தியால் குத்தினார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை குரொய்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்காக க் குரல் கொடுத்து வருபவருமான சோஃபியன் மக்டொனா தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.இது ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு என்றும் குற்றவாளிகளை பொலிசார் விரைவில் கைதுசெய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.