கடாபியை போற்றுகிறார் விமல் வீரவன்ச
மனித உரிமை, யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் ஜனநாயகம் தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நேட்டோ நாடுகளின் தலைவர்களுடைய நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுய இறைமையுடைய நாட்டின் தலைவர் ஒருவரை கொன்றுபோட்டுள்ள வேளையில் மேற்குலக நாடுகள் அமைதிப் போக்கை கடைபிடித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாடுகளில் காணப்படும் வளங்களுக்கு ஆசைப்பட்டு அந்த நாடுகளை மேற்குலக நாடுகள் ஆக்கிரமிக்கும் போக்கு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யார் என்ன கூறினாலும் லிபியா இன்று காணப்படும் நிலைக்கு அதனை உயர்த்தியவர் முன்னாள் தலைவர் கடாபி என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடாபியின் ஆட்சி குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் லிபியாவில் சமூகப் பொருளாதாரத்தில் ஏனைய நாடுகளைப் போன்றே வளர்ச்சி காணப்பட்டதாக விமல் வீரவன்ச அறிக்கை ஒன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment