இனிப்பாகப் பேசிபழகும் ஆண்கள் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்
இனிப்பாகப் பேசிப் பழகும் ஆண்கள் தொடர்பிலே பெண்கள் விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி நிலையம் ஸ்தாபகத் தலைவர் ஜெஜீமா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது,
மக்கள் குடும்பமாக, சமுதாயமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே ஆணாதிக்கம் முனைப்புப்பெற்று வந்துள்ளது. இருபது நூற்றாண்டுகள் கடந்த பின்பும் அந்த ஆதிக்கத்தின் விளைவுகள் வாழ்க்கைக்கு வேண்டிய சில அம்சங்களில் நன்மையாக அமைந்தாலும் ஆணாதிக்கம் தீய வழியில் பயன்படுத்தப்படும் போது அதுபெண்கள் மீதான வன்முறையை அதிகரிக்கின்றது.

கல்வி அறிவு குறைந்திருந்த காலத்திலே ஆண்களின் வன்முறையைப் பெண்கள் வெளியில் சொன்னால் வெட்கம் என்ற மனப்பாங்கில் சகித்துக் கொண்டே வந்துள்ளனர். ஆனால் இன்றைய பெண் சமூகம் ஆண்களைப் போல் சமமான கல்வி பெற்று, சமமான சம்பளம் பெற் றுத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதும் பெண்கள் மீது ஆண்கள் காட்ட வேண்டிய சகோதர மனப்பாங்கும், மதிப்பு கொடுக்க வேண் டிய உரிமைகளைக் கொடுத்தல் போன்ற அம்சங்களில் தளர்வு நிலை காணப்படுவதால் பல வகையிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் மீது வன்முறை யைக் காட்ட ஆண்கள் தயங்குவதில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் நிரூ பிக்கின்றன. இத்தகைய நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். பெண்கள் மரியாதையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டும். இதற்குத் தீர்வாக ஆண் கள் தமது ஆதிக்கப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் பெண்கள் சிலரின் சம்பவங்களே அம்பல மாகின்றன. முறைப்பாட்டை ஆண்களிடமே செய்ய வேண்டியுள்ளது. இந்த இடத்திலே பாதிக்கப்பட்ட பெண்ணை தரக்குறைவாக மதித்து அவளை மதிப்புக் குறைந்த நிலையில் பார்க்கும் அதிகாரப்போக்கும் அவளைப் பாதிக்கின்றது.
இந்த அவல நிலை மாற பெண்களுக் கான சமூக நல அமைப்புக்கள் பல உருவாக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த அமைப்புகளின் மூலமாக தமது பிரச்சி னையை வெளிக்கொணர வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இனிப்பாகப் பேசிப் பழகும் ஆண்கள் தொடர்பிலே பெண்கள் விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும். தமது சிறப்பும் வாழ்வும் எந்நேரமும் பாதிக்கப்படலாம் என்ற உள்ளச்சத்தோடு ஆண்களின் சாகசங்களுக்கு பெண்கள் துணை போகக் கூடாது என்றார்.

Post a Comment