Header Ads



யாழ்ப்பாணத்தில் இந்துக் கடவுள்கள் களவு போகிறதாம்


யாழ்.குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் மற்றும் ஆலய வாகனங்கள் கொள்ளையிட்டுத் தென்பகுதிக்கு விற்பனை செய்யப்படுவதாக சர்வமதக் குருமார் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. இந்து ஆலயங்களின் கடவுள்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்பு போடவேண்டிய கட்டாய நிலைக்கு யாழ்.மக்கள தள்ளப்பட்டுள்ளனர்.

இந்து ஆலயங்களின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தி ஆலயங்களில் உள்ள தங்கத்திலான விக்கிரகங்கள், பித்தளை, வெள்ளியிலான உயிரோட்டமான சிற்பங்கள் தேரில் உள்ள பல லட்சம் பெறுமதிவாய்ந்த சிற்பங்கள் எல்லாம் கொள்ளையர்களினால் கொள்ளையடிக்கப்படுவதாக சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் சபா வாசுதேவ குருக்கள் தெரிவித்தார்.

மக்கள் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் ஒரு முயற்சியாக இந்து ஆலய விக்கிரகங்கள் திருடப்படுறது. அத்தோடு ஒரு கும்பல் தொழிலாக இந்துக்களின் ஆலய விக்கிரகங்களைத் திருடித் தென்பகுதிகளில் தொல்பொருட்களுக்காகவும் உலோகங்களுக்காகவும் விற்பனை செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

இதுகுறித்து விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மௌலவி சுபியானும் கலந்துகொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.