Header Ads



உலக நாடுகளின் சிறந்த வணிகச்செயற்பாடு - இலங்கைக்கு 89 ஆவது இடம்

தென்னாசிய நாடுகளின் வர்த்தக நிலவரமானது முன்னேற்றமடைந்து வரும் நிலையில் இலங்கையானது 89 ஆவது இடத்தில் உலகவங்கி அறிவித்துள்ளது. உலகவங்கியின் புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் எவ்வாறு வணிகச் செயற்பாடுகள் மிக இலகுவாக மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பாக 183 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாய்வின் பிரகாரம் சீனா 91வது இடத்திலும், ரஸ்யா 120 வது இடத்திலும், பிரேசில் 126 வது இடத்திலும் உள்ளன. 

இவ்வாய்வின் பிரகாரம் முதல் ஆண்டை விட 09 இடங்கள் முன்தள்ளப்பட்டு இலங்கை 89 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வருமான வரிசெலுத்தலில் உள்ள ஒத்துழைப்புத் தன்மை மற்றும், முதலீட்டாளர்களைப் பலமாகப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டமை போன்றவற்றால் சிறிலங்கா இவ்வாண்டில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்றன முன்னரை விட மோசமான நிலையைக் கண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் எதிர்மறை விளைவைப் பெற்றுள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டின் சிறுவியாபாரிகளிடமிருந்து அறவிடும் இலாப வரி வீதத்தின் அளவைத் தற்போது அதிகரித்துள்ளது. பங்களாதேஸ் தனது நாட்டில் புதிதாக மின்சாரத்தைப் பெற விண்ணபிப்போருக்கான நடைமுறையில் சில கடினங்களை உருவாக்கியுள்ளது.

இதன் விளைவாக, பாகிஸ்தான் 09 இடங்கள் பின்தள்ளப்பட்டு 105 ம் இடத்திற்கும், பங்களாதேஸ் நான்கு இடங்கள் பின்தள்ளப்பட்டு 122 ம் இடத்தைப் பெற்றுள்ளது. விரைவான நீதிமன்றச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியதன் விளைவாக முதலில் 107 வது இடத்திலிருந்த நேபாளம் தற்போது மூன்று இடங்கள் முன்னோக்கி 110 ம் இடத்திற்குச் சென்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக தென்னாசிய நாடுகள் தமது உள்ளக வர்த்தகச் செயற்பாடுகளை இலகுவாக்கி தற்போது அவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று இந்நாடுகள் பல்வேறு வழிகளில் தமது வர்த்தகச் செயற்பாடுகளை இலகுவாக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.