புத்தளத்தில் 5 ஏக்கர் தென்னங்காணியை களவாக கைப்பற்றிய பொலிஸ் அதிகாரி
புத்தளம் மாவட்டத்தில் கடமை புரியும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அந்த மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபா பெறுமதியான தென்னம் தோப்பு ஒன்றினை பலாத்காரமாகக் கைப்பற்றியுள்ளார் என காணி, காணி அபிவிருத்தி அமைச்சரான ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேசத்தில் கண்டக்குளி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான தென்னங் காணியையே அவர் இவ்வாறு அடாத்தாகக் கைப்பற்றியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பு கொண்ட தென்னம் தோப்பு இந்த பொலிஸ் அதிகாரியினால் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தான் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச நில அளவையாளர்களின் துணையுடனேயே குறிப்பிட்ட இடத்துக்கு எல்லை வகுத்து இவர் கைப்பற்றியுள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment