Header Ads



கிழக்கு ஆபிரிக்காவில் தொடர்ந்து பஞ்சம் - 4 இலட்சம் சிறுவர்கள் மரண அபாயத்தில்

கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக அங்கிருக்கும் பிரிட்டன் உதவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடரும் பஞ்சத்தினால் நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இறந்து வருகின்றனர். மேலும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரண அபாயத்தில் இருப்பதாக பிரிட்டன் உதவி நிறுவனத்தின் செயலாளர் அன்ட்ரூ மிச்சல் பி.பி.சி.க்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் மழைகாலம் நிலைமையை மோசமாக்கும் எனவும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.