Header Ads



1790 வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு - முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு

யாழ். குடாவில் யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்த மக்களுக்கு சுமார் மூன்று மில்லியன் ரூபா செலவில் 1790 வீடுகளை இராணுவத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இராணுவத்தினரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டின் பெறுமானமும் ரூபா 2,00000 முதல் 3,00000 இலட்சம் பெறுமதி கொண்டவை என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரின் வழிகாட்டலின் கீழே இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாழும் எந்தவொரு முஸ்லிம் குடும்பத்திற்கும் இராணுவம் தாம் அமைத்ததாக கூறும் வீடுகளில் ஒன்றைதானும் இதுவரை முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லையென்றும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.