Header Ads



அமெரிக்காவும் இலங்கை முஸ்லிம்களை மறந்தது

தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் முஸ்லிம் தரப்பினரை சந்திக்காமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றிருந்த பிளக், முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த எந்தவொரு அமைப்பினையோ அல்லது பிரதிநிதிகளையோ சந்திக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அமெரிக்கா உண்மையாகவே விரும்பினால் முஸ்லிம் தரப்பினருடனும் பிளக் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தில் முஸ்லிம் சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ரொபர்ட் ஓ பிளக் முஸ்லிம் சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தரப்பினருடன் பிளக் ஏன் சந்திப்பு நடத்தவில்லை என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.