அராஜக இஸ்ரேலின் அகழ்வு - மஸ்ஜித்துல் அல்அக்ஸா இடிந்து விழும் அபாயம்
மஸ்ஜித் அல்அக்ஸாவிற்கு கீழ் இஸ்ரேல் பூமியை தோண்டுவதால் மஸ்ஜித் அல்அக்ஸாவிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் போராட்ட இயக்கமான ஹிஸ்புல்லாவை சுட்டிக்காட்டி அல்ஊதில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த அகழ்வாராய்ச்சி முஸ்லிம்களின் முதல் கிப்லாவும், முஸ்லிம் உலகின் தனித்துவ அடையாள சின்னமானதுமான மஸ்ஜித் அல்அக்ஸாவிற்கு பெரும் ஆபத்தாக அமையும். அராஜக இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்நடவடிக்கைக்கு முஸ்லிம் உலகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கையால் அல் அக்ஸாவின் அடித்தளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அது எந்தத் தருணத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகமும் அமைதி காப்பது இந்த குற்றத்தில் பங்கு கொண்டவர்களாக அவர்களை ஆக்குகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரபு லீக்கும், இஸ்லாமிய மாநாட்டு அமைப்பும், சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இஸ்ரேலின் இந்த பணியை தடுக்க உதவுவதுடன், மஸ்ஜித்துல் அல்அக்ஸாவின் அடித்தளத்தைமேலும் திடமாக்க வேண்டுமென்றும் ஹிஸ்புல்லா அமைப்பு அனைத்து முஸ்லிம்களிடமும் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment