யாழ் மாணவியும் சாதனை - வைத்தியராக வருவது இலட்சியம் என்கிறார் (படம்)
இன்று வியாழக்கிழமை வெளியாகிய புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதுஷிகா, தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோளாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பில் முஸ்லிம் மாணவி சாதனை
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கான பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஏ.ஆர்.பாத்திமா ஸீனா 190 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். இவர் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் M. H. அப்துல் றசூல் அவர்களின் மகளாவார்.

Post a Comment