ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கல்வியமைச்சின் சான்றிதழ்
2010 மற்றும்2011 ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சத்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இவ்வருடம் ஒன்றாக வழங்கப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.ஒரு வினாப் பத்திரத்திற்கு 35 புள்ளிகள் என இரண்டு வினாப்பத்திரங்களுக்கம் 70 க்கு மேல் புள்ளிகள் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருககும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த வருடம் மற்றும் இவ்வருடத்துக்கான சாறிதழ்கள் ஒரே நேரத்தில் வழங்கப்பட உள்ளன.
ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் செப்தெம்பர் 4 ஆம் திகதி வரையில் வடக்கு - கிழக்கு உட்பட 29 நிலையங்களில் இடம் பெற்றன.
இம்முறைப் பரீட்சைக்கு 321401 மாணவர்கள் தோற்றியதாகவும் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் வெளியிட உள்ளதாகவூம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.
Post a Comment