சர்வதேச சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தில் இலங்கையர்
வளைகுடா நாடுகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத எண்ணெய் வரத்தகத்துடன் இலங்கையர்கள் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இலங்கையின் வர்த்தக கப்பல் பணியாளர்கள் வளைகுடா நாடுகளின் கப்பல் சேவையில் அமர்த்துவது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு வர்த்தக கப்பல் பணிப்பாளர் ஷாந்த வீரகோன் தெரிவிக்கிறார்.
வளைகுடா வர்த்தக கப்பல்களில் பணியாற்றும் இலங்கையர்களை பயன்படுத்தி ஈரானிடமிருந்து மானிய விலையை எண்ணெய்யை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஒரு சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய செயற்பாடுகளுடன் தொடர்புடைய இலங்கையின் கப்பல் பணியாளர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதென அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
ஈரான் மக்களின் பாவனைக்காக மானிய விலையில் விநியோகிக்கப்படும் எண்ணெய்யை கொள்வனவு செய்து வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யும் நவவடிக்கையில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் சேவையில் ஈடுபடுவதை இலங்கையின் பணியாளர்கள் தவிர்க்க வேண்டுமென அவர் மேலும் தெரிவிக்கிறார்.

Post a Comment