யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றி அமெரிக்காவுக்கு பொய் சொன்ன தமிழ் அதிகாரிகள் - முஸ்லிம்கள் மௌனம் ஏன்..?
யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 48 குடும்பங்கள் இன்னும் ஏன் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை? இன்னும் ஏன் தாமதம்? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ரொபேர்ட் ஓ பிளேக்.யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் பல தரப்பட்டோரையும் தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடினார்.
மாவட்ட செயலகத்துக்கு முதலில் விஜயம் செய்தனர் பிளேக் குழுவினர். மேலதிக அரச அதிபருடனான சந்திப்பு மூடிய அறையில் இடம் பெற்றதால் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர். மோகனேஸ்வரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.சந்திப்பின் முடிவில் மேலதிக அரச அதிபர் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் சிலவற்றை மட்டும் ஊடகங்களுக்கு பின்னர் வெளிப்படுத்தினார்.
யாழ். மாவட்டத்தில் இதுவரை காலம் எத்தனை பேர் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் 11 ஆயிரத்து 48 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 147 பேர் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் என்று பிளேக்கிடம் விவரிக்கப்பட்டது.இதன்போது பிளேக் "அவர்கள் ஏன் மீளக் குடியமர்த்தப்படவில்லை'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும் மேலதிக அரச அதிபர் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமை தொடர்பாகவும் பிளேக்கினால் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கள் தொடர்பாக அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது.மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பாகவும், மக்களின் வாழ்வாதார தேவைகள் தொடர்பாகவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் மேலதிக அரச அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கைகளை பிளேக் செவிமடுத்த போதும் எந்தவிதமான உறுதி மொழிகளையும் வழங்கவில்லை.

யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு கிடைக்கும் ஆதராபூர்வ தகவ்களின்படி 500 க்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்களே தமது தாயகமான யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக்குடியேறியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உட்பட்ட இன்னும் பல ஆயிரம் யாழ்ப்பாண முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கியுள்ளனர். இதுவே மகா உண்மையும்கூட.
இந்நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் யாழ்ப்பாணம் சென்றபோது அவரிடம் அங்குள்ள தமிழ் அதிகாரிகள் 11, 48 குடும்பங்கள் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் மீளக்குடிமர்த்தப்பட வேண்டியுள்ளனர் என பச்சைப்பொய் கூறியுள்ளனர்.
கடந்தபல காலங்களிலும் யாழ்ப்பாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்கள் தொடர்பில் தவறான அறிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு காண்பித்துவந்த யாழ்ப்பாண தமிழ் அதிகாரிகள் தற்போது மீண்டும் அவ்வாறான தகவலொன்றையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேகிடமும் கூறியுள்ளனர். இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் சர்வதேச உதவிகள் அல்லது அரச சார்பற்றி நிறுவனங்களின் உதவிகள் பாதிக்கப்பட்ட யாழ் முஸ்லிம்களை சென்றடைவதில் தடைகள் ஏற்படும்.
எனவே இதன் பாரதூரத்தை அறிந்து, யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலனுக்காக செயற்படுவதாக கூறும் யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனமும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் அமைப்புக்களும் செயற்படுவது அவசியமாகும் என்பதை யாழ் முஸ்லிம் வலைத்தளம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Post a Comment