Header Ads



வேப்பிலையை பயன்படுத்தி நுளம்புக் கொல்லி - இலங்கையர் சாதனை

 வேப்பிலையை பயன்படுத்தி புதிய நுளம்புக் கொல்லியொன்றை தயாரிப்பதற்கு நுவரெலியாவை சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளது.

மத்திய மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் பூரண அனுசரனை மற்றும் கண்காணிப்பில் இந்த நுளம்பு கொல்லியை தயாரிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பலனாக புதிய நுளம்புக் கொல்லி தயாரிக்கப்பட்டுள்ளதாக இதனை தயாரித்த கே.எம்.விஜேபால நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை வேப்பிலையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நுளம்புக் கொல்லிக்கு தரச் சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் சுனில் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.