தெஹிவளை, கல்கிஸையில் இப்படியும் தேர்தல் பிரச்சாரம்
தெஹிவளை கல்கிஸை மாநகரசபைக்கு அரச தரப்பின் மேயர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள வேட்பாளரொருவர் முற்றிலும் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றை மிஞ்சும் வகையில் அவரது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பதால் பிரசார நடவடிக்கைகளுக்கு வாகனங்களைக்கூடப் பயன்படுத்த வசதியில்லாமல் வேட்பாளர்கள் தவிக்கும் நிலையில், குறித்த வேட்பாளர் ஹெலிக்கொப்டர் மூலம் பறந்து சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்றார்.
ஆடம்பரமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கட்டும் என்று பறந்து பறந்து நேற்று ஹெலிக்கொப்டரிலிருந்துவிநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தெஹிவளை கல்கிஸை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்திலுள்ள வடிகான்களிலும், குப்பைத் தொட்டிகளிலும், தரைகளிலும், வீட்டுக் கூரைகளிலும் விழுந்துள்ளன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment