சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு கசையடி வழங்க வலியுறுத்துகிறது நீதியமைச்சு
சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோருக்கு கசையடி வழங்க வேண்டுமென நீதியமைச்சு தெரிவிக்கிறது. நாடளாவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுஹத கம்லாத் தெரிவிக்கிறார்.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான விசேட திட்டமொன்றை நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது. இதற்கமைய குறித்த வழக்குகள் மீதான விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சிறுவர்களை பாதுகாப்பதற்காக சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு கசையடி வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
Post a Comment