ஐக்கிய நாடுகள் சபையில் செவ்வாய்கிழமை உரையாற்றுகிறார் மஹிந்த
ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை நியுயோர்க் பயணமாகின்றார். ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க்கில் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு திரும்புவதற்கு முன்னதாக பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், வெளிவிவகார அமைச்சர்களையும் மகிந்த ராஜபக்ச தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு, வெளிவிவகார அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குறிப்பாக அனைத்துலக அரங்கில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தே இந்தச் சந்திப்புகளில் கலந்துரையாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை போன்றோர் குறித்து அரசு கடும் அதிருப்தியடைந்துள்ள நிலையில்- மகிந்த ராஜபக்ச தனது ஐ.நாவுக்கான பயணத்தில் இதுபற்றியும் கலந்துரையாடலாம்.

Post a Comment