Header Ads



இந்திய - இலங்கை கடற்படை திருகோணமலையில் 6 நாட்கள் போர்ப்பயிற்சி

இந்திய இலங்கை கடற்படைகள் திருகோணமலைக் கடற்பரப்பில் நாளை திங்கட்கிழமை தொடக்கம் பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்திய தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்புடனான இராஜதந்திர, இராணுவ நெருக்கத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் போர்ப்பயிற்சி இடம்பெறவுள்ளது.

SLINEX என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சி ஆறு நாட்கள் நடைபெறவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இரு நாடுகளினதும் கடற்படைகள் சார்பில் குறைந்தது தலா நான்கு போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.

இலங்கை கடற்படையுடன் ஏற்கனவே இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்ட போதும், இது அவற்றைவிட சற்றுப் பெரியளவிலானது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி மேலும் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான இலங்கை படையினருக்கு கடந்த பல ஆண்டுகளாக இந்தியா, பல்வேறு பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இலங்கைவில் சீனாவின் அதிக்கம் அதிகரிப்பதை முறியடிக்க ஆயுத மற்றும் இராணுவப் பயிற்சி, புலனாய்வு பகிர்வு, கூட்டு கடல்ரோந்து, போன்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்ட்டுள்ளதாகவும் ரைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.