Header Ads



எகிப்தில் தேர்தல் - இஹ்வானுல் முஸ்லிம்கள் வெற்றிபெறும் வாய்ப்பு

எகிப்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் நவம்பர் 21-ம் தேதி நடக்கவுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. எகிப்தில் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் ஹோஸினி முபாரக் பதவி விலகியதை தொடர்ந்து தற்போது ராணுவத்தின் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு வரும் நவம்பர் 21- ம் தேதியும், மேல்சபைக்கு (ஷுரா கவுன்சில்) 2012-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி துவங்கி மார்ச் 4-ம் தேதி முடிவடைய உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பினை ராணுவ இடைக்கால கவுன்சில் செப்.26-ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறகின்றன.

அதேவேளை நீதியான தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் புரட்சிக்கு காரணமாக இஹ்வானுல் முஸ்லிமின் எனப்படும்  முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகுமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.