எல்லாப் புகழும் அல்லாஹ்வுகே என்கிறார் சாதனை மாணவன் ஸக்கி அஹ்மட் நளீம்
![]() |
| ஸக்கி அஹ்மட் நளீம் |
2011 ம் ஆண்டின்இ 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ் மொழி மூலம் 195 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்ற அநுராதபுர கெக்கிராவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஸக்கி அஹ்மட் நளீம் தமது கருத்தை வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது,
''அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாவுக்கே. நான் கூடிய புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு சந்தோசமா இருக்கு. முதலாம் வகுப்பிலிருந்து படித்துதந்த ஆசிரியர்களுக்கும், என்ற உம்மா, வாப்பா,அப்பா, உம்மம்மாவுக்கும் நன்றி சொல்கிறேன். வகுப்பு ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்கிறேன்''.
''பரீட்சை எழுதிய பின்னரே நான் 190 மேல் புள்ளிகள் எடுப்பேன் என்று சொன்னேன். அதுபோன்றே 195 புள்ளிகளை பெற்றுவிட்டேன். மிச்ச நள்ளா படிச்சி, பாஸாகி, மக்களுக்கு சேலை செய்வேன்'' என்றும் அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ள இந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த சாதனை மாணவனுக்கு ஐந்தாம் தரத்தில் கற்பித்த ஆசிரியை நிசாயா கருத்துகூறும் போது,
''மாணவன் ஸக்கி அஹ்மட் நளீம் நல்ல கெட்டிக்காரன். வகுப்பில் நடைபெறும் பரீட்சைகளில் முதலிடம் பெறுவார். எல்லாவிடயங்களையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்பு கொண்டவர்'' என்றார்.
தமது மகனின் பெறுபேறு குறித்தj தமது மகிழ்ச்சியை மாணவனின் தந்தையான மொஹமட் நளீம் வெளிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.ஸக்கி அஹ்மடின் பெற்றோர்களாகிய நாங்கள் இருவரும் ஆசிரியர்கள். அவருக்கு ஓரளவு வழிகாட்டினோம். அவருடைய ஆசிரியர்கள் முதலாம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை அவருக்கு சிறந்தமுறையில் வழிகாட்டினார்கள். பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடனேயே அவர், 'வாப்பா பயப்படாதிங்க நா 185 மாக்ஸ்க்கு மேலே எடுப்பேன்' என்று சொன்னார். அந்தடிப்படையிலேயே அவர் அல்லாஹ்வின் உதவியுடன் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார். நாடு பூராகவும் நான் ஐந்தாம்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் எடுப்பதுண்டு. அந்தவகையில் அவர் எனது மானத்தையும் காப்பாற்றியுள்ளார். எனது பிள்ளையின் இந்த சாதனைக்கு காரணமான சகலருக்கும் எனது நன்றிகள். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

Post a Comment