Header Ads



'சிசுவை நானே படுகோலை செய்தேன்' - றிஸானா 3 தடவை வாக்குமூலம்

தனது எஜமானின் சிசுவை தானே கொலை செய்ததாக சகோதரி றிஸானா நபீக் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பில் மூன்று தடவைகள் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆகவே கொலை செய்யப்பட்ட சிசுவின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே அவருக்கு விடுதலை சாத்தியமாகுமென அரப் நியூஸ் பத்திரிகையின் மூத்த ஊடவியலாளர் மொஹமட் ரசூல்தீன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இந்த ஊடவியலாளர் கடந்த கால்ஙகளில் சகோதரி றிஸானா தொடர்பில் கவனம் செலுத்த வந்தவர். இவர் மேலும் குறிப்பிடுகையில்,

றிஸானா தான் சிசுவை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு பொலிஸிலும், மஜிஸ்ரேட் விசாரணையிலும், கைது செய்யப்பட்ட 5 நாட்களின் பின் நீதிமன்ற விசாரணையின் போதும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவை பதிவுகளாக உள்ளன. எனினும் இதன்பின்னர் நடந்த விசாரணைகளில் தான் சிசுவை கொலை செய்யவில்லையென வாக்குமூலம் அளித்துள்ளார்.

றிஸானாவின் முடிவு சிசுவின் பெற்றோரின் கைகளிலேயே இருக்கிறது. றியாத்திலுள்ள பெற்றோரிடமிருந்து றிஸானாவுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக றியாத் மீள் இணக்கப்பாட்டுக்குழு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதுவரை பெற்றோர் மன்னிக்கும் மனநிலையில் இல்லை. இந்த குழுவுக்கு காலவரையறை இல்லை. எனவே தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

No comments

Powered by Blogger.