பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் தீவிரம் - இலங்கை டாக்டர்கள் அங்கு விரைவு
பாகிஸ்தான் நாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை களை முன்னெடுக்கவென இலங்கை மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று செவ்வாய்கிழமை அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்துக்குப் பயணமாகின்றது. பாகிஸ்தான் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப அந்நாட்டில் டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுக்கவென மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை இலங்கை அரசாங்கம் இன்று அனுப்பி வைப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாகிஸ்தானின் லாஹர், பஞ்சாப் பிரதேசங்களில் டெங்கு நோய் கட்டுக்கடங்காத நிலையை அடைந்துள்ளது. இதன் காரணத்தினால்தான் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை மருத்துவ நிபுணர்களின் உதவியைக் கோரி இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த மருத்துவ நிபுணர்கள் குழுவில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சிறுவர் நோயியல் நிபுணர், பொது மருத்துவர், பூச்சியியல் நிபுணர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்குபயணமாகின்ற இந்த மருத்துவ நிபுணர்கள் குழு பத்து நாட்களுக்கு அங்கு தங்கி இருக்கும். டெங்கு நோய்க்கு உள்ளாகின்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் நுளம்புகளை ஒழிப் பதற்கும் தேவையான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் இக்குழுவினர் பாகிஸ்தான் மருத்துவத் துறையினருக்கு இக்காலப் பகுதியில் வழங்குவர் எனவும் அவர் கூறினார்.
இக்குழுவினருடன் டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Post a Comment