Header Ads



கேவலம்கெட்ட நிர்வாகங்கள் - தினக்குரல் ஊடகவியலாளர்கள் பரிதாபத்தில்

வீரகேசரி ஏசியன் மீடியா பப்லிகேஸன் நிறுவனத்தினால் நியமனக் கடிதம் பெறாத தினக்குரல் பத்திரிகையின் ஊழியர்கள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முடியாது என அந்நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தை வீரகேசரி நிறுவனம் கொள்வனவு செய்ததை அடுத்து இந் நிறுவன ஊழியர்களை கட்டாயப்படுத்தி இராஜினாமா கடிதம் சமர்பிக்குமாறு தினக்குரல் நிறுவன பிரதானிகள் வற்புறுத்தியமை யாவரும் அறிந்ததே. இதன் போது ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த சுமார் 23 ஊழியர்கள் இராஜினாமா கடிதத்தை கொடுக்க மறுப்பித் தெரிவித்தனர்.

இச் சுழ்நிலையில் ஏசியன் பப்லிகேஸன் நிறுவனத்தினால் நியமனக் கடிதம் பெறாதவர்கள் நாளை மறுதினம் தொடக்கம் தினக்குரல் அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான அறிவித்தல் கடிதம் ஒன்று தினக்குரல் நிறுவனத்தின் அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தினக்குரல் ஸ்தாபகர் சாமி இப்போது சில மாதங்களுக்கு முன்னர் தினக்குரல் பத்திகையை வீரகேசரி நிறுவனத்தினருக்கு 15 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்தமையும், தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் பல மில்லியன் பெறுமதியான தனியார் வைத்தியசாலையொன்றை நிறுவிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே தினக்குரல் பத்திகையில் பணியாற்றிய ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவர்களின் எதிர்காலம் இக்கட்டான நிலையை அடைந்துள்ளது.

No comments

Powered by Blogger.