Header Ads



கிரிகிஸ்தான் பயணமானார் ரவூப் ஹக்கீம்

நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை காலை கிரிகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர்அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சருடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பின்னர் சில தினங்களில் நாடு திரும்புவார்.

கடந்த சில நாட்களாக உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றி உரையாற்றிவந்த அமைச்சர் ஹக்கீம், நாடு திரும்பியதும் தமது பிரசார நடவடிக்கைகளை மாத்தளை, கல்முனை, நுவரெலியா, கொழும்பு, நீர்கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் மீண்டும் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.