ரயில் விபத்தினால் 75 இலட்சம் ரூபா நட்டம்
அளவ்வயில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் 7.5 மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் ரயில்வே கட்டுப்பாட்டறையாளர்கள் சமிஞ்சைகளை சரிவர வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்த்த அமைச்சர் குமார் வெல்கம சம்பவம் தொடர்பில் தனிபட்ட ஒருவரது தவறு காரணமாக இருக்குமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அளவ்வயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ரயில் சாரதி, உதவிச் சாரதி, உதவியாளர் மற்றும் ரயிலில் பயணித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகலை மற்றும் அளவ்வ வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளவ்வ பகுதியில் நேற்றையதினம் இரு ரயில்கள் மோதிக்கொண்டது. இந்த விபத்தி காயமுற்ற 30 க்கும் மேற்பட்டோர் தற்போது குருநாகலை மற்றும் அளவ்வ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post a Comment