குர்பானை தடுத்தால் முஸ்லிம்கள் வீதிக்கு இறங்குவர் - எச்சரிக்கிறார் மௌலானா
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் குர்பான் கொடுக்கும்போது அமைச்சர் மேர்வின் சில்வா தடுக்க முயன்றால் அவருக்கெதிராக முஸ்லிம்கள் வீதிக்கு இறங்குவார்களென மேல் மாகாண அளுநர் அலவி மௌலான தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சிலாபம் கோயிலில் நடைபெறவிருந்த மிருகப் பலியை தடுத்தது போன்று அமைச்சர் மேர்வின் சில்வா ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானையும் தடுக்க முயன்றால் அவருக்கெதிராக முஸ்லிம்கள் வீதிக்கு இறங்குவார்கள். இதன்போது முஸ்லிம்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு ஏனைய இனத்தவர்களும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயற்பாடுகள் இலங்கைக்கு எதிராக இயங்கும் சர்வதேச சக்திகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். மிருகப் பலியை தடுப்பதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறப்படுகிறது என்ற பிரச்சாரம் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா புனித ஹஜ்ஜுப பெருநான் தினத்தில் முஸ்லிம்கள் கொடுக்கும் குர்பானை தடுத்து நிறுத்த முடியுமாவெளவும் அலவி மௌலானா சவால் விட்டுள்ளார்.

Post a Comment