முஸ்லிம்களிடம் வைரஸ் பரப்புகிறது சி.ஐ.ஏ. - போராசிரியர்கள் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் டெங்கு காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திடீரென டெங்கு பரவ அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. லாகூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஹூசைமா புகாரி, இக்ராமுல் ஹக் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரை செய்தித்தாள்களில் நேற்று வெளியானது.
அதில்,"கடந்த 1980ம் ஆண்டு தான் பாகிஸ்தானில் டெங்கு கிருமிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ பரப்பியது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக உயிர்க் கொல்லி கிருமிகளை பரப்பியது அமெரிக்கா. அப்படியே பாகிஸ்தானுக்கும் அதை அனுப்பி வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பஞ்சாப் மாகாண சட்டசபை கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் சிலர்,"டெங்கு பரவ இறைவனின் கோபம்தான் காரணம். எனவே இறைவனிடம் மக்கள் மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அது ஒன்றுதான் டெங்கு பிரச்னைக்கு தீர்வாகும்" என்று கூறியுள்ளனர்.
டெங்கு பரவுவதை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் தீவிர பணியாற்ற வேண்டும். அதனால் சட்டசபை கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று திகதி குறிப்பிடாமல் சபையை சபாநாயகர் ஒத்தி வைத்துள்ளார். ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு பயந்து உறுப்பினர்கள் பலர் லாகூருக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

Post a Comment