அல்ஹைதாவின் புதிய வீடியோ நாடா வெளியானது
அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்பின் 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அல்-குவைதா வெளியிட்டுள்ள வீடியோவில், அரபுலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கங்களின் அறிவிப்புகளை வெளியிடும், "சைட்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, ஒரு மணிநேரம் ஓடக்கூடியதாக உள்ளது. இதில் பேசிய அல்-குவைதா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி,"டுனீஷியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியால், அந்நாட்டு அதிபர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். இது தான் உண்மையான இஸ்லாம்' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவில், கடந்த மே மாதம் கொல்லப்படுவதற்கு முன் ஒசாமா பின்லாடன் பேசிய ஒரு காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவர், "அமெரிக்கர்கள் தனியார் நிறுவனங்களின் அடிமைகளாக மாறி வருகின்றனர்' என கூறியுள்ளார்.

Post a Comment