புலிகளை ஒழித்தமையால் எமக்கு சர்வதேச தண்டனை - ஆதங்கப்படுகிறது அரசாங்கம்
விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் சபை சர்ச்சைக்குரிய நகர்வில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருப்பது குறித்தே அந்த அரசாங்க வட்டாரங்கள் இவ்வாறு கூறியுள்ளன.
நாடுகளின் குழு ஒன்றினதும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களினதும் விருப்பங்களுக்கேற்பவே ஐ.நா இந்த சர்ச்சைக்குரிய நகர்வில் ஈடுபட்டதாகவும் இலங்கை அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டிய அந்த வட்டாரங்கள், போருக்குப் பிந்திய அபிவிருத்தியை கெடுக்க அவை இரகசிய சதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளன.

Post a Comment