Header Ads



டோராபோர குகையிலிருந்து ஒஸாமாவை காப்பாற்றிய பாகிஸ்தான்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பின்னர் அல்கொய்தா  இயக்கத்தின் தலைவர் பின்லேடன் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் உள்ள டோராபோர குகையில் பதுங்கி இருந்தார்.

மேலும் அங்கு அல்கொய்தாகளின் பயிற்சி முகாம்களும் அங்கு இருந்தன. இந்த நிலையில்இ 2001-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பின்லேடன் பதுங்கியிருந்த குகையை அமெரிக்க ராணுவம் கண்டு பிடித்தது. எனவே இந்த குகையின் மீது குண்டு வீசி தாக்கியது. ஆனால் அதில் இருந்து பின்லேடன் தப்பினார். 

அவர் அங்கிருந்து தப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஐ.எஸ். ஐ. உளவு நிறுவனம் உதவியுள்ளது. இந்த தகவலை  ஆப்கானிஸ்தான் முன்னாள் உளவுதுறை தலைவர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாரப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் டோராபோர குகையில் இருந்த பின்லேடனுக்கு உதவ பாகிஸ்தான் உளவுதுறையை சேர்ந்த சையத் அக்பர் சமீரு தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.   அங்கிருந்து பாகிஸ்தானின் சிட்ரடில் வழியாக அவர் பெஷாவருக்கு சென்றார் என்று கூறினார்.

அம்ருல்லா சலே ஆப்கானிஸ்தான் உளவுத்துறையில் கடந்த 2004 முதல் 2010-ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் உளவுத்துறையினரால் பாகிஸ்தான் உளவுதுறையை சேர்ந்த சையத்அக்பர் சபீர் மற்றும் பிடா முகமது ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்த விவரங்கள் தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'தி நியூ பார்கெர்' என்ற வாரபத்திரிகையில் வெளியாகி உள்ளது. 

No comments

Powered by Blogger.