Header Ads



கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 10 கோடி ரூபா வெளிநாட்டு நாணயங்கள் மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10 கோடி ரூபா வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையரொருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் சிங்கபூர் தப்பிச்செல்லவிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் அரசுடமையாக்கப்படும் என நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.