இணையம் மூலமாகவே 78 நாட்டவர்களுக்கு வீசா - அரசாங்கம் அறிவிப்பு
78 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இணையம் ஊடாக வீசா வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான வீசா விண்ணப்பங்களை இணையம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் அரைவல் வீசா முறைமை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு மட்டுமே எதிர்வரும் காலங்களில் ஒன் எரைவல் வீசா வசதி வழங்கப்படும். 78 நாடுகளின் பிரஜைகள் இவ்வாறு ஒன்லைன் முறையில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்ததெந்த நாடுகள் ஒன்லைன் மூலம் வீசா விண்ணப்பிக்க முடியும் என்ற தரவுகள் வெளியிடப்படவில்லை

Post a Comment