அசாருதீனின் மகன் உயிரிழந்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் அயாசுதீன் (வயது 16). அசாருதீனின் மைத்துனர் மகன் அஜ்மல் (வயது 16). அயாசுதீனும், அஜ்மலும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தயங்களில் பயன்படுத்தப்படும் நவீன மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
அஜ்மல் விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். அயாசுதீன் படுகாயத்துடன் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. எனினும், அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வந்தது.
அவர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அயாசுதீன் இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் கேட்டு, ஆஸ்பத்திரி முன்பு திரண்ட அசாருதீனின் உறவினர்கள் கதறி அழுதனர். அசாருதீனுக்கு உறவினர்களும் நண்பர்களும் ஆறுதல் கூறினார்கள்.

Post a Comment