முஸ்லிம் நாடுகளிலிருந்து ஓட்டம்பிடிக்கும் இஸ்ரேலியர்
எகிப்தைத் தொடர்ந்து ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திலிருந்து அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேல் எல்லை பகுதியில் கடந்த மாதம் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஐந்து போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை, போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தும், தீயிட்டும் கொளுத்தினர். இஸ்ரேல் நாட்டின் விமானப்படை விமானம் விரைந்து வந்து தூதரக அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தாரையும் மீட்டுச் சென்றது.
இதேபோல, ஜோர்டானிலும் இஸ்ரேல் தூதரக முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. தலைநகர் அம்மானில் உள்ள தூதரகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தப் போவதாக தகவல் வந்தவுடன், இஸ்ரேல் தூதரகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களது தாயகத்துக்கு திரும்பினர்.

Post a Comment