Header Ads



கட்டிட நிர்மான செலவு கூடிய நாடுகளில் இலங்கைக்கு 53வது இடம்


இலங்கையில் கட்டிட நிர்மான செலவுகள் உயர்ந்துள்ளன. இதனை 'கட்டிடவாக்க சொத்துகள் ஆலோசனை நிறுவகம்' (Built asset consultancy) வெளியிட்டுள்ள '2011 சர்வதேச கட்டிட நிர்மான செலவு அறிக்கை' உறுதிப்படுத்தி உள்ளது.

கட்டிட நிர்மான செலவுகள் கூடிய ஆசிய நாடுகளின் பட்டியலில், 13 வது இடத்தில் இலங்கை மற்றும் இந்தியா காணப்படுவதுடன் அனைத்து உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை 53 வது இடத்திலும் காணப்படுவதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பான், கொங்கொங், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகியன முன்னிலையில் உள்ள கட்டடிட நிர்மான செலவு கூடிய நாடுகள் என '2011 சர்வதேச கட்டிட நிர்மான செலவு அறிக்கை' மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.