பலஸ்தீன் தனி நாடாகுவதற்கு ஹமாஸ் எதிர்ப்பா..?
பலஸ்தீன தனி நாடு கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையில் தோல்வி அடையும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹ குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மஹ்மூத் அப்பாஸின் இந்த முயற்சிக்கு காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலை பலஸ்தீன தனிநாட்டுக்கான ஐ.நா. அங்கத்துவத்தைப் பெறும் கோரிக்கையை பலஸ்தீன ஜனதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்த வாரம் ஐ.நா. கூட்டத்தில் முன்வைக்கவுள்ளார். எனினும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் இல்லாமல் பலஸ்தீனுக்கு ஐ.நா. அங்கத்துவம் கிடைக்காது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அமைச்சரவையில் உரையாற்றிய நெதன்யாஹு கூறும்போது, பலஸ்தீனுக்கு ஐ.நா.வின் முறையான அங்கத்துவம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த முயற்சி பாதுகாப்புச் சபையூடாகவே செல்ல வேண்டும். அமெரிக்கா எமது பக்கம் இருந்தே செயற்படுகிறது என்றார். பலஸ்தீன அங்கத்துவத்திற்கு எதிராக பாதுகாப்புச் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பலஸ்தீன தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிராக ஐ.நா.வில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளதாக நெதன்யாஹு குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்லும் நெதன்யாஹு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐ.நா. கூட்டத்தில் பலஸ்தீன அங்கத்துவத்தை கோரி மஹ்மூத் அப்பாஸ் வரும் 23 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்தின் ஐ.நா. அங்கத்துவத்திற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பலஸ்தீனின் காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இந்த திட்டம் பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமையை இல்லாமல் ஆக்கிவிடும் என மஹ்மூத் அப்பாஸை எச்சரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா இது குறித்து காஸாவில் கூறியதாவது, வரலாற்று அடிப்படையிலான பலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு பலஸ்தீன தனி நாட்டை ஆதரிக்கிறோம். ஆனால் இடையீட்டு எல்லைகளைக் கொண்ட பலஸ்தீன் தனிநாட்டை ஐ.நாவிடம் கோருவதை ஏற்கமாட்டோம். இஸ்ரேல் எல்லைகளையும் உள்ளடக்கிய முழு பலஸ்தீனம் உருவாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
1967 ஆம் ஆண்டு எல்லைக்கு அமையவே பலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கை ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் காஸா, கிழக்குக்கரை மற்றும் கிழக்கு ஜரூசலம் ஆகிய பகுதிகளே பலஸ்தீனமாக ஏற்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் தற்போது ஐ.நா. சபையில் நிரந்தரப் பார்வையாளராக உள்ளது. இதில் ஐ.நா. சபையில் உரையாற்ற முடியும் என்றாலும் வாக்களிக்க முடியாது. இந்நிலையில் பலஸ்தீன அங்கத்துவம் கிடைத்தால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். இதனடிப்படையில் இஸ்ரேலுக்கு சட்ட ரீதியான அழுத்தம் கொடுக்க பலஸ்தீனுக்கு வாய்ப்பு ஏற்படும்.
எனினும் ஐ.நா.வின் பலஸ்தீன் அங்கத்துவத்திற்கு பாதுகாப்புச் சபையில் அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் பொதுச் சபையில் மூன்றில் இரண்டு நாடுகள் ஆதரவளித்தால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். இதற்கமைய பொதுச் சபையில் 126 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனினும் இதுவரை பல நாடுகள் தமது இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment