லிபியாவின இடைக்கால அரசில் முரண்பாடு - இஹ்வானுல் முஸ்லிமின் தனிவழியா..?
லிபிய இடைக்கால அரசின் புதிய அமைச்சரவையை நியமிக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. எனினும் இடைக்கால அரசின் பிரதமராக மஹ்மூத் ஜிப்ரீல் தொடர்ந்தும் நீடிப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் தேசிய மாற்ற கவுன்ஸில் அமைத்துள்ள இடைக்கால அரசின் புதிய அமைச்சரவையை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேசிய மாற்ற கவுன்ஸில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எனினும் புதிய அமைச்சரவையை தேர்வு செய்வதில் உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு நிலவியது. குறிப்பாக அமைச்சரவை குறித்து பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் முன்வைத்த திட்டங்கள் குறித்து மாற்ற கவுன்ஸிலில் அங்கத்துவம் பெற்றுள்ள அமைப்புகளுக்கு அறிவுறுத்தாமை குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இது குறித்து தேசிய மாற்ற கவுன்ஸிலின் அரசியல் விவகார குழுவின் தலைவர் பாதி பாஜா கூறும்போது, லிபிய இடைக்கால அரசு (மாற்ற கவுன்ஸில்) லிபியா முழுமையாக சுதந்திரம் பெறும்வரை ஆட்சியில் இருக்கும் என பிரதமர் ஜிப்ரீல் குறிப்பிட்டிருந்தார். எனினும் அது எவ்வாறான சுதந்திரம் என்பது குறித்து விளக்கவில்லை என தெரிவித்தார்.
லிபியாவின் தேசிய மாற்ற கவுன்ஸில் மேலும் 20 மாதங்களுக்குள் அரசியல் சட்டதிருத்தம் மற்றும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment