Header Ads



கிளிநொச்சி இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர்

யாழ்.மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறப் போகின்றது. என்றுமே கிடைக்காது என்று கருதிய கிளிநொச்சி இரணைமடு தண்ணீர் வெகுவிரைவில் யாழ். மக்களுக்கும் வந்து சேரவுள்ளது. இதற்கென அரசு 2100 கோடி ரூபாவை செலவிடவுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை கூறுகின்றார் ஆளும் கட்சிக் கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன.

ஆளும் கட்சி உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்களின் குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் மேற்குறிப்பிட்ட செயற் றிட்டம் தொடர்பான கடன் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப் பட்டுள்ளது. இதன்மூலம் 90 மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்படும். இரணைமடு யாழ்ப்பாண குடி தண்ணீர் திட்டத்துக்கு மொத்த செலவினம் 164.04 மில்லியன் அமெரிக்க டொலர். ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெற்ற 90 மில்லியன் அமெரிக்க டொலர் நீங்கலாக எஞ்சிய தொகையை இலங்கை அரசும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனமும் செலவிடவுள்ளன.

இந்தத் திட்டம் பூர்த்தியடையும் போது மூன்று லட்சம் பேருக்கு நல்ல குடிதண்ணீர் வசதிகளையும் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசலகூட வடிகால் அமைப்புக்கான நீரை யும் பெறமுடியும்.

 இதன்மூலம் பளை, பூநகரி, யாழ்ப்பாணம், கொடிகாமம், கரவெட்டி, சாவகச்சேரி, நாவற்குழி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய், கட்டுடை, நவாலி, சங்கானை, நல்லூர், மூளாய், அராலி, வட்டுக்கோட்டை, காரைநகர், ஊர்காவற்றுறை, அனலைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பயன் அடைவர்.

No comments

Powered by Blogger.