யாழ்ப்பாணத்தில் மெகா வர்த்தகநிலையம் - இம்தியாஸ் வாஹிட் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் பாரிய பொழுதுபோக்கு வணிகவளாகம் ஒன்றை அமைக்க காகில்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1200 ஆசனங்களைக் கொண்ட மூன்று திரையரங்குகளை உள்ளடக்கியதாக இந்த வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளதாக காகில்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் இம்தியாஸ் வாஹிட் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சில்லறை வணிக வளாகங்கள் அதிகளவில் இல்லை என்றும் அங்கு பொழுதுபோக்கு வணிகவளாகம் ஒன்று அவசியம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்.நகரின் மத்தியில் மருத்துவமனை வீதியில் 500 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த பொழுதுபோக்கு வணிவளாகத்தை அமைக்கும் பணிகள் இந்தவாரம் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பொழுதுபோக்கு வணிக வளாகத்தை அமைப்பதற்காக அடிக்கல் வியாழக்கிழமை நாட்டப்பட்டுள்ளதாகவும், 16 மாதங்களில் இதன்கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் காகில்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். காகில்ஸ் நவீன சந்தையுடன், மேலும் 20- 25 வணிக நிலையங்களும், உணவகம் ஒன்றும், மூன்று திரைகளுடன் கூடிய திரையங்கத் தொகுதி இந்தப் பொழுதுபோக்கு வணிகவளாகத்தில் அமைக்கப்படவுள்ளன.

Post a Comment