Header Ads



''வாசனா அஞ்சலா வைத்தியராகட்டும்''

''வாசனா அஞ்சலா''
"சிறு பயம் இருந்தது, இருப்பினும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது, அது நிறைவேறியுள்ளது"

ராகமை மூட்டு அலட்சி வாதநோய் மற்றும் புனர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற வாசனா அஞ்சுலா என்ற சிறுமி பகிர்ந்துகொண்ட தனது எண்ணக் குறிப்புகளே இவை.hrd

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த சிறுவர்களில் வாசனாவும் ஒருவர். மூன்று வருடங்களாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது கல்வியைத் தொடர்ந்து வந்த வாசனா, இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்று சிறப்பான சித்தி பெற்றுள்ளார்.

கால்கள் வலுவிழந்த நிலையிலும் மனதில் திடம்கொண்ட வாசனா விபத்தொன்றில் சிக்கி எழுந்து நடக்க முடியாத நிலையில் தற்பொழுதும் சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்நாளைக் கழித்து வருகிறார். பஸ் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான தனது மகள் ஞாபக சக்தியை இழந்ததோடு, இடுப்புக்கு கீழ்ப்பகுதி முற்றாக செயலிழந்து காணப்பட்டதாக அவரி்ன் தாயார் தெரிவிக்கின்றார்.

இருப்பினும் காலத்தால் இவள் கால்களுக்கு மட்டுமே தடைகளைப் போடமுடிந்தது, திறமைகளுக்கு அல்ல. கவிதை, ஓவியம், இனிமையாகப் பாடுதல் என பல்வேறு திறமைகளை வாசனா தன்னகத்தே கொண்டுள்ளார்.

மகளுக்கு சிறந்த கல்வியைப் புகட்டுவதே தனது தேவை என தெரிவிக்கும் இவர், பெரும் அசௌகரியத்தின் மத்தியிலேயே இதனை மேற்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றார்.எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வாசனா, நன்றாகப் படித்து சிறந்த வைத்தியராக வரவேண்டும் என்பதே தனது ஆசை என  தனது கனவினை பகிர்ந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.