Header Ads



அஸாருதீன் மகனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவரது மகன் அயாசுதீனும், உறவினர் அஜ்மலும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது விபத்துக்கு உள்ளானார்கள். இதில் அஜ்மல் பலியானார். அயாசுதீன் படுகாயத்துடன் ஐதராபாத்தி உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலை, மார்பு பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நரம்பியல் அனைத்தும் சுயநினைவில் இல்லை. செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது. விபத்தில் அயாசுதீனின் இடது கிட்னியிலும் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் அவரது இடது கிட்னியை அகற்றினார்கள்.

இது குறித்து ஆஸ்பத்திரி தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பிரசாத் கூறும்போது, அயாசுதீனின் இடது கிட்னி அகற்றப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார். அசாருதீனின் முதல் மனைவியும், அயாசுதீனின் தாயாருமான நவ்ரின் சவுதி அரேபியாவில் இருந்து வந்து ஆஸ்பத்திரியில் மகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார்.

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்று அசாருதீனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.