இலங்கையில் மிண்டும் தூக்குத் தண்டனைக்கு 80 வீதமானவர்கள் ஆதரவு
சிறைச்சாலைகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நூற்றுக்கு 80 வீதமானவர்கள், மீண்டும் தூக்கு தண்டனை கொண்டு வரப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ. டப்ளியூ. கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
தறபோது நாட்டில் நடைபெறும் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக தூக்கு தண்டனை இருக்க வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட 357 கைதிகள் உள்ளனர். இவர்கள் வெலிகடை, போகம்பரை மற்றும் மெகசீன் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment