இனவெறி நரேந்திரமோடி உண்ணாவிரதம் - 10 ஆயிரம் முஸ்லிம்களும் பங்கேற்பு
நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மையப்பொருளாக முன்வைத்து குஜராத் முதல்வர் முஸ்லிம் இனவெறி நரேந்திரமோடி 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார். இந்த விரதத்ததில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருடன் முஸ்லிம் மக்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
குஜராத் மாநிலத்தின் முதல்வர் மோடி தற்போது உலக அளவில் பேசப்படும் தலைவராக உருவகம் பெற்று வருகிறார்.இவரது ஆட்சி காலத்தில் குஜராத் மாநிலம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி பெற்று வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழில்வளர்ச்சியில் முன்னணி பாதை நோக்கி சென்று மாநில வளர்ச்சிக்கு மோடி பெரிதும் துணையாக இருந்து வருவதாக பல புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குஜராத் வன்முறை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த விவகாரத்தில் கீழ்கோர்ட்டே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பா.ஜ.,வுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை தெளிவுப்படுத்துவதாக பா.ஜ., அறிவித்தது. வரும் காலத்தில் மோடி பிரதமர் பதவிக்கு பா.ஜ., முன்நிறுத்தும் ஒரு நபராக திகழ்வார் என அமெரிக்க பார்லி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மோடியை சுற்றி தேசிய அரசியல் காற்று வீசிக்கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மோடி 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று ( சனிக்கிழமை ) காலையில் ஆமதாபாத்தில் துவக்கினார். குஜராத் பல்கலை வளாகத்தில் நடக்கும் உண்ணாவிரத மேடையில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் 5 மண்டல பகுதிகளில் இருந்து தலா 2 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வீதம் 10 ஆயிரம் பேர் இந்த விரதத்தில் பங்கேற்கின்றனர்.
அனைவருக்கும் நீதி கிடைக்க பாடுபடுவேன் மோடி கடிதம்: கடந்த 10 ஆண்டுகளில் எனது உண்மையான தவறுகள் சுட்டிக்ககாட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டில் இனக்கலவரம் , மோதல் எவ்வித நன்மையையும் இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தாது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு எனது மாநில அரசு செயல்பட்டு வருகிறது. எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

Post a Comment