Header Ads



பரீட்சை முடிவுகளில் சந்தேகமா..? முறையீடு செய்யலாம்

வெளியிடப்பட்ட ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் சந்தேகம் இருப்பின் அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் பல தடவைகள் மீள்பரிசீலனைக்கு உட்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். அதனால் விடைத்தாள்கள் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளில் சந்தேகங்கள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அது குறித்து முறையீடு செய்ய முடியும். பரீட்சைகள் திணைக்களம் தபால் பெட்டி இலக்கம் 1503 என்ற முகவரிக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

அதிபரினால் குறித்த மேன்முறையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனபதுடன், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கும் விதத்தில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.